சம்பல் எம்பிக்கு 1.91 கோடி அபராதம்: என்ன காரணம்?
உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் மின்சாரம் திருடப்பட்டதற்காக மக்களவை எம்.பி. ஜியா உர் ரஹ்மானுக்கு ரூ.1.91 கோடி அபராதமும், அவரது வீட்டில் மின் இணைப்பையும் துண்டித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமாஜவாதி கட்சி எம்.பி.க்கு எதிராக 2003-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் பிரிவு 135-ன் கீழ் மின்சாரம் திருடப்பட்டதாக வியாழனன்று காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.