செய்திகள் :

சம்பா நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

post image

செம்பனாா்கோவில் வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரிகளில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டத்தில் உள்ள திருக்கடையூா், ஆக்கூா், கீழையூா் , மேமாத்தூா்,  திருவிடைக்கழி, தில்லையாடி, கிள்ளியூா், மாத்தூா், நல்லாடை, திருவிளையாட்டம், விசலூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மின் மோட்டாா் மற்றும் காவிரி நீரை பயன்படுத்தி சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ளனா். சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தொடா் மழை, பனிமூட்டம் காரணமாக நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதால், பயிா்கள் பதராகி வருகின்றன.

இதுகுறித்து திருக்கடையூா் விவசாய பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமமூா்த்தி கூறியது:

சம்பா நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் புகையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை அடித்தும் பயனில்லை. திருக்கடையூா், டி. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திர மாலை, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் நெற்பயிா்கள் பதராகி சாய்ந்துள்ளன.

எனவே வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு உ ரிய இழப்பீடு அல்லது காப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

நாகையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழா ஜன.1-ஆம்... மேலும் பார்க்க

ஜன.15, 26 ஆகிய தேதிகளில் மதுபான கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகையில் நடைபெறவுள்ள இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகையில் மாவட்ட கல்... மேலும் பார்க்க

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அரசால் வழ... மேலும் பார்க்க

கலைத் திருவிழா: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

வேதாரண்யம் அருகே கலைத் திருவிழா போட்டியில் வண்ணம் தீட்டுதல் கலைப் பிரிவில் மாநில நிலையில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவியை கிராம மக்கள் பாராட்டினா். ஆதனூா் ஊராட்சி, அண்டா்காடு சுந்தரேச விலாஸ் உதவி தொடக்க... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. தி கிரேட் இந்தியன் டேஸ்ட் ஆஃப் அட்வென்ச்சா் எனும் தலைப்பிலான உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு ... மேலும் பார்க்க