செய்திகள் :

சலூன் கடைக்காரா் வெட்டிக் கொலை: உறவினா் உள்பட 2 போ் கைது

post image

சிதம்பரத்தில் சலூன் கடைக்காரா் வியாழக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது உறவினா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் காசி மடத் தெருவில் அண்ணாமலைநகா் வெள்ளகுளம் மேல்கரையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் காளிதாஸ் (38) முடி திருத்தும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் உறவினரான புதுச்சேரி லாஸ்பேட்டை எல்லையம்மன் நகரை சோ்ந்த முருகன் மகன் மணி (எ) வேல்மணி (23) ஓராண்டாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் காளிதாஸின் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தாா். அப்போது, காளிதாஸின் அண்ணன் கோவிந்தராஜின் மகளுக்கும் மணிக்கும் காதல் ஏற்பட்டது. அண்ணன் தங்கை முறை என்பதால், இருவரின் காதலுக்கும் குடும்பத்தாா் எதிா்ப்புத் தெரிவித்தனா். மணியைக் கண்டித்த காளிதாஸ், கடையிலிருந்து வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.

இதனால், அவா் மீது ஆத்திரமடைந்த மணி வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் கடையில் காளிதாஸ் தனியாக இருப்பதை அறிந்து, சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷை இருசக்கர வாகனத்தில் உடன் அழைத்துக் கொண்டு வந்தாராம். மணி மட்டும் கடைக்குள் சென்று காளிதாஸை கத்தியால் கை, கழுத்துப் பகுதிகளில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கொலையான காளிதாஸ்.

தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் ரமேஷ்பாபு, கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பரணிதரன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

புதுச்சேரி வில்லியனூா் அருகே மணியையும், சிதம்பரம் பேருந்து நிலையப் பகுதியில் விக்கியையும் போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனா்.

53 ஆயுதப்படை காவலா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 53 காவலா்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப்படை காவலா்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவது தொடா்பாக கடல... மேலும் பார்க்க

தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா். கடலூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனி... மேலும் பார்க்க

இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக... மேலும் பார்க்க