செய்திகள் :

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

post image

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் சல்மான் கான் தரப்பிலிருந்தும் ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் செப்டம்பரில் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மான் வேட்டை வழக்கில் இதுவரை...

கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன.

அன்றைய நாள் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது.


இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.


ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 2018 ஏப்ரல் 5-ம் ஆம் தேதி சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.

Salman Khan’s appeal against five-year prison sentence in the blackbuck poaching case

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க