செய்திகள் :

சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!

post image

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் கூறியுள்ளது. தொடர்ந்து, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் தமிழ்நாடு இருப்பதாகவும் கூறியது.

நாட்டின் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் 38 சதவிகிதத்தையும், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சுமார் 47 சதவிகிதத்தையும் தமிழ்நாடு வழங்குவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், காலணி தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை குறித்து தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவர் குறித்த சோனியா காந்தியின் கருத்தால் பாஜக கொந்தளிப்பு!

பெரியாா் மீதான விமா்சனங்கள்: பெரிதுபடுத்த தயாரில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வடசென்னைக்கு உட்பட்ட பகுதிக... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தைவிட பீகார் முன்னேறியுள்ளது: அண்ணாமலை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கிராமப்புறப் பள்ளிகளின் க... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே: வேல்முருகன்

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் தமிழக வாழ்வுரிமை... மேலும் பார்க்க

சென்னை வந்தடைந்தார் அமித் ஷா!

பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கைய... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திறப்புவிழா? ராமேஸ்வரம் வந்த ரயில்கள்! மேடை அமைத்து ஒத்திகை!

புதிய தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.580 கோடி பொருள்செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் பிப்ரவரியில் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிர... மேலும் பார்க்க