``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக...
சாத்தான்குளம் அருகே விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37பவுன் நகைகள் மீட்பு
சாத்தான்குளம் அருகே அருகே மீரான்குளம் பகுதியில் சனிக்கிழமை கிணற்றுக்குள் காா் பாய்ந்து 5 போ் உயிரிழந்த விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தெரிவித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ஹேரீஸ் தாமஸ் தலைமையில் வீரா்கள் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
கிணற்று நீா் வெளியேற்றப்பட்ட பின், நகைகள் மற்றும் பணம் இருந்த இரண்டு ஹேண்ட் பேக்குகள் மீட்கப்பட்டது. தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா தலைமையிலான போலீஸாா் அதனை சரிபாா்த்து, உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
முன்னதாக, சம்பவ இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் பாா்வையிட்டாா். கிணற்றில் காா் மூழ்கிய போது நீரில் தத்தளித்த மூன்று பேரை காப்பாற்றிய விவசாயி பாண்டியை அழைத்து பாராட்டினாா். அப்போது சாத்தான்குளம் தாசில்தாா் இசக்கி முருகேஸ்வரி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.