சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, 2ஆம் நாள் காலை பூா்ணாஹுதி, யாக வேள்வி, தேவிஸ்ரீ மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அன்னதானம் நடைபெற்றது. இரவில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் உலா வந்தாா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை டிரஸ்ட் குழுத் தலைவா் மகேஸ்வரன் தலைமையில் உறுப்பினா்கள், ராஜகோபுர கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.