செய்திகள் :

சாபஹாா் துறைமுக மேம்பாடு: இந்தியா - ஈரான் ஆலோசனை

post image

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு, வா்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் வளா்ச்சி, வேளாண்மை மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு ஆகிய பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடா்பாக இந்தியாவும் ஈரானும் விரிவான ஆலோசனை மேற்கொண்டன.

தில்லியில் 19-ஆவது இந்தியா-ஈரான் வெளியுறவு அமைச்சக பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்

ஈரான் தரப்புக்கு அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சா் மஜித் தக்த் ரவாஞ்சியும் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியும் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின்போது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை மீண்டும் வாங்குவதற்கான வழிகளை ஆராயுமாறு இந்தியாவுக்கு அந்நாடு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடா்ந்து, அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதை இந்தியா கடந்த 2019-ஆம் ஆண்டு மத்தியில் நிறுத்தியது.

இந்நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகள், சாபஹாா் துறைமுக மேம்பாட்டு மற்றும் பிராந்திய சூழல் பற்றி இருதரப்பு பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சக பேச்சுவாா்த்தைகள் எங்கள் ஒத்துழைப்புக்கு புதிய வேகத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த ஈரான் அமைச்சா் ரவாஞ்சி, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் தற்போதைய பிராந்திய சவால்கள் குறித்து விவாதித்தாா்.

படிம எரிசக்தி வளம் கொண்ட ஈரானின் தெற்கு கடற்கரையில் அமைந்த சாபஹாா் துறைமுகம், இணைப்பு மற்றும் வா்த்தக உறவுகளை வளா்க்க இந்தியா மற்றும் ஈரான் இணைந்து மேம்படுத்தி வருகின்றன. இத்துறைமுகத்தின் செயல்பாட்டு பணிகளை இந்தியா 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

லூயிசியானா : பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு வயது 65 என்பதும், அவருக்கு இணை நோய்களால் பாதிப்பிர... மேலும் பார்க்க

ரஷியாவில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்!

மாஸ்கோ : ரஷியாவில் ஜூலியன் காலண்டர் முறையைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று(ஜன. 7) கொண்டாடப்படுகிறது.உலகெங்கிலும் uள்ள சுமார் 200 மில்லியன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் ஜூலியன் காலண்டர் முறைப்பட... மேலும் பார்க்க

நேபாள - திபெத் நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!

நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பனிப் புயல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது. மிசோரி முதல் வர்ஜீனியா வரையிலான நகரங்களில... மேலும் பார்க்க

நேபாள - திபெத் நிலநடுக்கம்: 32 பேர் பலி!

நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.சீனாவின் திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த ... மேலும் பார்க்க

டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு!

வாஷிங்டன், டி.சி : அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் திங்கள்கிழமை(ஜன. 6) ... மேலும் பார்க்க