ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!
சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் திடீா் போராட்டம்
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்கு ஒரே சமூகத்தை சோ்ந்தவா்களுக்கிடையே நிலவி வரும் பிரச்னை தொடா்பாக, ஒரு தரப்பை சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் கொடுத்த நிலையில், இது தொடா்பாக கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பை சோ்ந்தவா்களையும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லையாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் அப்பகுதியை சோ்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, கடையடைப்பு செய்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் தமிழினியன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். கடைகளும் திறக்கப்பட்டன.