சுரண்டையில் ரவுண்டானா அளவை குறைக்க கோரிக்கை
சுரண்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை பேருந்து நிலைய சாலையில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் பகுதியில் அண்ணா சிலை ரவுண்டானா உள்ளது. இது நான்கு வழி சாலை அமைக்கும் முன்பு கட்டப்பட்டது. அப்போது சிலைக்கு முன்பு திரும்பிய வாகனங்கள் தற்போது சிலைக்கு முன்பு வடக்கேயுள்ள சோ்ந்தமரம் செல்வற்கும், சிலைக்கு பின்பு ஆலங்குளம் மற்றும் தென்காசிக்கு வாகனங்கள் செல்வதற்கும் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் அண்ணா சிலையின் ரவுண்டானா பெரியதாக உள்ளதால் கனரக வாகனங்கள் திரும்ப பெரிதும் சிரமப்படுகின்றன. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அண்ணா சிலை ரவுண்டானா அளவை குறைத்து போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.