செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா கேப்டன்!

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்

ரோஹித் சர்மா கேப்டன்

15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள போதிலும், முழு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதையும் படிக்க:ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் ஹர்சித் ராணா இடம்பெற்றுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயருக்கு அணியில் இடமில்லை.

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்)

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன்!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றது.விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. விதர்... மேலும் பார்க்க

137 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 17) முல்தானில் தொடங... மேலும் பார்க்க

முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாததற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி போட்டியில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ... மேலும் பார்க்க

"அருமையான அணி...” பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-க்கு பாராட்டு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பிசிசிஐ மிகவும் சிறப்பான அணியை அறிவித்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முத... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க