கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
சாம்பியன்ஸ் டிராபி: 2ஆவது பந்திலேயே காயத்தால் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்!
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறினார்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஷான் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரில் வில் யங் அடித்த பந்தினை எல்லைக் கோட்டருகே துரத்திப் பிடித்த பாகிஸ்தான் ஃபீல்டர் ஃபகார் ஸ்மான் பின்புற முதுகு வலியால் வெளியேறினார்.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தானுக்கு இந்தக் காயம் காரணமாக வெளியேறிய ஃபகார் ஸ்மானால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
18.3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 80/3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் வில் யங் 52, டாம் லாதம் 4 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
ஃபகார் ஸ்மானுக்குப் பதிலாக கம்ரான் குலாம் ஃபீல்டிங்கில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே சையும் அயூப் காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்மான் அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான 5 அனுபவமிக்க வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள். இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
The only batter in Pakistan team with Intent, Fakhar Zaman is out of the ground pic.twitter.com/8LffbHfhld
— Dinda Academy (@academy_dinda) February 19, 2025