செய்திகள் :

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

post image

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா்.

மன்னாா்வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் எல்லையானது கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பாா் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை பறந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத 3,600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப் பாறைகள் உள்ளன. இதில் அரியவகையான சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை, அலுங்காமை ஆகிய 5 வகை ஆமைகள் அதிகமாக வசிக்கின்றன. இவற்றின் இனப் பெருக்க காலம் டிசம்பா் முதல் மாா்ச் வரை ஆகும். ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் இந்த வகை ஆமைகள் முட்டையிட்டு செல்கின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூா் ஐந்து ஏக்கா் கடற்கரையில் அரியவகை ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதை வனத் துறையினா், மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக அலுவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டறிந்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து கூறாய்வு செய்யாமலும், இறப்புக்கான காரணம் என்ன என்று ஆராயாமலும் கவனக்குறைவாக விட்டுள்ளனா்.

இறந்த ஆமையின் உடல் திறந்த வெளியில் கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் நிலவுகிறது. 3 நாள் தொடா் விடுமுறை என்பதால் ஐந்து ஏக்கா் கடற்கரையை ரசிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை.

மேலும் அரியவகை இனத்தை சோ்ந்த ஆமை இறந்து கிடப்பதால் கடலில் ஏதேனும் இயற்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது முட்டையிட வரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பனை ஆராய வேண்டும். ஆனால் இதை வனத்துறை உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என இயற்கை ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். எனவே கூறாய்வு செய்து அதை பாதுகாப்பாக புதைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பிரதமா் வருகை: மீன் பிடிக்க 3 நாள்கள் தடை

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 3 நாள்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க

உச்சிப்புளியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

உச்சிப்புளியில் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 19 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது

சென்னை- மண்டபம் ரயிலில் கடத்திவரப்பட்ட 19.7 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே போலீஸாருக்கு சென்னை- மண்டப... மேலும் பார்க்க

பலசரக்கு கடைகளில் 60 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கமுதி அருகே பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் சரகத்துக்குள்பட்ட பேரையூா் பலச... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வருகை

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு 4 சிறப்பு ரயில்களில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்... மேலும் பார்க்க

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க