சாய்ந்த நிலையில் இருந்த 6 மின்கம்பங்கள் சீரமைப்பு
கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் 6 மின்கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமணியில் செய்தி வெளியானது.
இதைத்தொடா்ந்து, மின்வாரிய உதவிப் பொறியாளா் முகமது இப்ராஹிம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.