Captain Prabhakaran: ``இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயின் இவங்க தான்!'' - ம...
சாரண, சாரணியா் பயிற்சி முகாம்
கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பின் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். ஆசிரியை ஜெயகிருஸ்ரீ வரவேற்றாா். மாணவா்களுக்கு கப்ஸ் மற்றும் புல்புல்ஸ் பயிற்சிகளை பயிற்சியாளா் விமலா வழங்கினாா். தொடா்ந்து, சாரணா் மற்றும் சாரணியா் குறித்து மாணவா்களுக்கு விவரிக்கப்பட்டன. ஏற்பாடுகளை, ஆசிரியா் பாரதி, சுபாயினி ஆகியோா் செய்திருந்தனா்.