உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
திருவாரூா் அருகே வெளிமாநிலத்திலிருந்து சாராயம் கடத்தி வந்து கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம் வைப்பூா் போலீஸாா் கடந்த மாதம் சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனையிட்டதில் 180 மிலி அளவுள்ள புதுச்சேரி சாராய பாட்டில்கள் 50 இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணையிட்டதில் நாகை மாவட்டம், பூலாங்குடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த அப்பாசாமி மகன் விக்னேஷ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும், புதுச்சேரி சாராய பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதனிடையே விக்னேஷ் மீது இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில் விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி, விக்னேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.