செய்திகள் :

சாரா அலி கான் நடனத்துடன் தொடங்கும் சென்னை - ராஜஸ்தான் போட்டி!

post image

முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் இன்று பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், வருகிற மார்ச் 30 ஆம் தேதி அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக திடலில் மாலை 6.30 மணியளவில் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சியும், ஹைதராபாத் - லக்னௌ போட்டியில் இசையமைப்பாளர் தமன் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எதிரணியில் விராட் கோலி இருந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது! -ருதுராஜ்

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடைய... மேலும் பார்க்க

எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரமன்தீப் சிங் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு: லோக்கி பெர்குசன் அறிமுகம்!

ஐபிஎல் தொடரின் லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.Locked in for his debut! ⚡#IPL2025 #LSGvPBKS #BasJeetnaHai #PunjabKings pic.twitter.com/DmhYl... மேலும் பார்க்க

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க