செய்திகள் :

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

post image

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுமந்துசென்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க், உடா மாகாண பல்கலை.யில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் கொலைக்கு அமெரிக்காவின் அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடா மாகாணத்தில் இருந்து அரிஸோனா மாகாணத்துக்கு சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமானம் மூலம் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது, அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சார்லி கிர்க்கின் உடலை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஜே.டி. வான்ஸும் சுமந்துசென்றார்.

இதேபோல், அரிஸோனாவில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, சார்லி கிர்க்கின் மனைவி எரிக்காவுடன் துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸ் வந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக, சார்லி கிர்க்கின் கொலை குறிப்பிட்டு இது அமெரிக்காவின் இருண்ட காலம் என விமர்சித்த டிரம்ப், அந்நாட்டின் உயரிய ’மெடல் ஆஃப் ஃபிரீடம்’ விருதை சார்லிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

சார்லி கிர்க், ஜே.டி. வான்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

The vice president carrying Charlie Kirk's body

இதையும் படிக்க : அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

நேபாளத்தில் தப்பியோடிய 67 கைதிகள் இந்திய எல்லையில் கைது!

நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பியோடிச் சென்று, இந்திய- நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 67 கைதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள அரசால் சமூக... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிக... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்பு!

அமெரிக்காவில் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரு... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியானது!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிக... மேலும் பார்க்க

குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், மனைவி மற்றும் மகன் கண் முன்னே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தலையைத் துண்டித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்

போலந்து எல்லைக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் நுழைந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடி... மேலும் பார்க்க