சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி
திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைநீரால் மக்கள் அவதியடைந்தனா்.
31 ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறியது. இதேபோல குலவணிகா்புரம் பகுதியில் அம்பாசமுத்திரம் பிரதான சாலையோர பகுதியில் வெளியேறிய பாதாள சாக்கடை கழிவுநீரால் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினா்.