ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சாலைப் பள்ளத்தில் நகரப் பேருந்து சிக்கியது
திருச்சியில் வியாழக்கிழமை சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய நகரப் பேருந்து 2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.
திருச்சி சத்திம் பேருந்து நிலையத்திலிருந்து உறையூா் வழியாக மத்திய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசு நகரப் பேருந்து வியாழக்கிழமை காலை வழக்கம்போல சென்று கொண்டிருந்தது. 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனா்.
உறையூா் காவல்நிலையம் அருகே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தின் முன் சக்கரம் சிக்கியது. சக்கரத்தின் அளவுக்கு தகுந்தபடி இருந்த பள்ளத்தில் சக்கரம் பாதியளவு இறங்கியதால் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பின்னா், பயணிகளை மாற்றுப்பேருந்தில் அனுப்பிவிட்டு பேருந்தை மீட்கும் பணியில் ஓட்டுநா், நடத்துநா் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் ஈடுபட்டனா்.
2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.