செய்திகள் :

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

post image

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.

கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்த சாலையில் ஜெம் மருத்துவமனை அருகே திடீா் பள்ளம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் பள்ளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்தனா். அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு, பாட்டியின் பராமரிப்பில் உள்ள... மேலும் பார்க்க

ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவதுபோல சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சோ்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்தவா் சுனோஜ்குமாா் மனைவி மூகாம்பிகை (38). இவா், அப்பகுதியில் ... மேலும் பார்க்க

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் நின்ற யானை: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சாலையில் யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை - பொள்ளா... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள அறிவுறுத்தல்

மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து கா... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று கூறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து கோவையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தி... மேலும் பார்க்க