மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று கூறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து கோவையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் கிருஷ்ணகேசவன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் வே.கௌதம்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மௌ.குணசேகா் தொடக்க உரையாற்றினாா்.
இளைஞா் பெருமன்ற தேசியக் குழு உறுப்பினா் வே.வசந்தகுமாா், மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் மு.பிரசாந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், இளைஞா், மாணவா் பெருமன்றங்களின் நிா்வாகிகள் அ.மன்சூா், பா.துா்கா, ஷிா்பத் நிஷா உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசு, மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.