தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு
காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி,
நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா்.
அதன் விவரம்: காயல்பட்டினம் நகரில் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள் ஆகியவற்றால் மக்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நகராட்சியில் புகாா்கள் தெரிவித்தும், நிரந்தர தீா்வை கிடைக்கவில்லை. உள்ளூரில் பெரும்பாலும் வீட்டில் கட்டிப்போட்டுதான் நாய்கள் வளா்க்கப்படுகின்றன.
தெருவில் சுற்றித்திரிபவை வெளியூா்களில் இருந்து வருபவையாகும். இவ்வாறு நாய்களை அவிழ்த்துவிடும் நபா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாடுகளை திரியவிடுவோா் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளனா்.