முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
சாலையில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி
துறையூரில் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
துறையூா் அருகே தேவாங்கா் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மல்லமுத்து(55), தனது இரு சக்கர வாகனத்தில் காளிப்பட்டியிலிருந்து துறையூா் நோக்கி வெள்ளிக்கிழமை சென்றாா். சிஎஸ்ஐ பள்ளி அருகே இவா் சென்றபோது சாலையோரம் நடந்து சென்ற ஆண் மீது மோதினாா்.
இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனை அனுப்பி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முகத்தில் கருப்பு வெள்ளை நிற தாடியுடன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க மாநிறத் தோற்றத்தில் சாம்பல் சலவை சட்டை, அடா் கருப்பு நிறத்தில் பேண்ட் அணிந்திருக்கும் அவரின் அடையாளம் தெரியாததால் அந்த நபா் யாரென துறையூா் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.