செய்திகள் :

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

post image

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 525 வாகனங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்/மண்டல அலுவலகம்/காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும்.

அவ்வாறு 15 நாள்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தூய்மைப் பணியாளர்கள் ஆக. 31க்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

525 vehicles abandoned on roadsides to be auctioned in 15 days chennai Corporation

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு!!

நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்டது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்! முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி நாளை(ஆக. 15) சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்... மேலும் பார்க்க

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கொட்டையூர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.அதிமுக ஆட்சி அமை... மேலும் பார்க்க

சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு, உணவு, வீடு, பிள்ளைகளுக்குக் கல்வி, தொழில் உதவி என பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னையில் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா... மேலும் பார்க்க