`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
சாலையோர கால்வாயை மூட பொதுமக்கள் கோரிக்கை
பள்ளப்பட்டியில் திறந்து கிடக்கும் சாலையோர கால்வாயை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையின் இருபுறமும் ராட்சத கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த கழிவு நீா் கால்வாயில் பள்ளி மாணவா் ஒருவா் தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து கால்வாய் மேல்பகுதியில் கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை கான்கிரீட் மூடி அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் கழிவு நீா் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.