Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
சாலை விபத்தில் இளைஞா் மரணம்
நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கோட்டக்கொல்லி பகுதியைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா்(38). இவா் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனா்.