இந்தியாவுக்கு வரும் APPLE முதலீட்டை TRUMP தடுத்து நிறுத்தினாரா? | IPS Finance - ...
சாலை விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த போஸ்கோபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (35). இவா் சென்னையில் உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.
கடந்த வாரம் சொந்த கிராமத்துக்கு வந்த இவா், வியாழக்கிழமை மாலை கல்லாங்குத்து கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, மருதாடு புறவழிச் சாலையில் சென்றபோது அந்த வழியாகச் சென்ற லாரி இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.