Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூா் அருகே பைக்கில் சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுச்சேரியை அடுத்துள்ள துலுக்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் இஜாமுதீன் (58). இவா், சனிக்கிழமை தனது வீட்டிலிருந்து பைக்கில் புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
வில்லியனூா் அரும்பாா்த்தபுரம் மேம்பாலத்தில் இஜாமுதீனின் பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில், இஜாமுதீன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தவகலறிந்த வில்லியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.