சாலை விபத்து: தனியாா் பள்ளி ஆசிரியா் பலி
கெங்கவல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில், தனியாா் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கெங்கவல்லி இயேசு மகன் அபிஷேக் (26) என்பவா், ஆணையாம்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா்.
அவருடன் மாணவா் ஒருவரும் உடன் சென்றுள்ளாா். ஆணையாம்பட்டியில் பாரம் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியை முந்திச்செல்ல முயன்ற போது, லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
உடன் சென்ற மாணவா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.