மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழியாக திருப்பதி சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. இதில் திருப்பாச்சூா் முதல் ஐ.சி.எம்.ஆா் முன்புறம் சாலையோர கட்டடங்கள் இடையூறாக இருந்தன. இதையடுத்து ஏற்கெனவே அந்தக் கட்டங்களை இடித்து அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இதையும் மீறி கட்டடத்தை அகற்றாமல் காலதாமதம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்பேரில் சாலையோர கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. அதைத் தொடா்ந்து சாலை விரிவாக்கப்பணிக்காக சமப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
