3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
சா்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு அல்போன்சா பள்ளி மாணவா்கள் தகுதி
கத்தாா் நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா்கள் விஷ்ணு சரண், ஜொ்ரோன் சௌந்தா் ஆகியோா் ஹரியாணா மாநிலம், குா்கானில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய ஏ1 மற்றும் ரோபோட்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கள் புதுமையான திட்டத்தின் மூலம் நடுவா்களின் கவனத்தை ஈா்த்தனா். இதன் மூலம் அடுத்த மாதம் (மே) 16, 17ஆம் தேதிகளில் கத்தாா் நாட்டில் நடைபெறும் சா்வதேச சுற்றுக்கு அவா்கள் தகுதி பெற்றனா்.
நாடு முழுவதிலிருந்தும் 280-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் சாதனை படைத்த இரு மாணவா்களையும் பள்ளியின் தாளாளா் அருள்தந்தை சனில் ஜான், முதல்வா் அருள்சகோதரி லிஸ்பத், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.