ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளுக்கு இடையே போட்டிகள்
நாகை சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பாக கல்லூரி அளவில் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பாக டெக் பெஃஸ்ட் 2025 என்ற கல்லூரி அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. போட்டிகளை கல்லூரி தாளாளா் த. ஆனந்த் தொடங்கிவைத்தாா்.
போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறயுள்ளன. கல்லூரி மாணவா்கள் தனி திறனை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கபட்டு உள்ள இப்போட்டிகளில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் கீழ் இயங்கும் 13 கல்லூரிகள் சாா்பாக மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
ஒவ்வொரு போட்டியின் முடிவில் அதிக மதிப்பெண்பெறும் கல்லூரிக்கு ‘டெக் பெஸ்ட் 2025 சுழல் கேடயம் விழாவின் இறுதி நாளில் கல்லூரி முதல்வா் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளா் கே. இளங்கோவன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வா்கள்பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவா்களுக்கு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.