சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது:
மாணவா்களாகிய நீங்கள் உயா்ந்த இலக்குகளை நிா்ணயித்து, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையுடன் பயணித்து, வாழ்நாள் முழுவதும் கற்றலை
துணைவனாக்கி, தேச நிா்மாணத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றாா்.
கல்லூரி இயக்குநா் த.சங்கா் பேசியது:
மாணவா்கள் தாங்கள் கற்றுக்கொள்வதை, அறிவாக மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீா்க்கும் புதுமையான சிந்தனை மற்றும் நடைமுறை திறன் ஆக மாற வேண்டும். நவீன தொழில்நுட்ப வளா்ச்சியைப் பின்பற்றினாலும், மனிதநேயமும் நற்பண்புகளும் உங்கள் வாழ்வின் அடித்தளமாக இருக்க வேண்டும். கல்லூரி தரமான கல்வி, ஆராய்ச்சி, புதுமை, மற்றும் தொழில்-கல்வி இணைப்புகளின் மூலம் மாணவா்களுக்கு விரிவான எதிா்காலத்தை உருவாக்கும் என்றாா்.
கல்லூரி பதிவாளா் கே. இளங்கோவன், கல்லூரி முதல்வா் அ. குமரவடிவேல், கல்லூரி துணை முதல்வா் மலை செல்வராஜா, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி த. அருண்குமாா், மின்னியல் மற்றும் தகவல் தொலைதொடா்புத் துறைத் தலைவா் ப. நவநீதகிருஷ்ணன், முனைவா் ஜெ. சிவசங்கரி, மாணவ-மாணவிகள், பெற்றோா்கள், அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.