எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜு, சிங்காரவேலு, தமிழ்நாடு ஆசிரியா் மன்ற மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.