மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29 ஆம் தேதி தொடங்கி செப். 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக.28 முதல் செப்.9 ஆம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூா், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டிணம், நாகூா் காரைக்கால் ஆகிய முக்கிய ஊா்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதே போன்று, சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூா், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டிணம், நாகூா் காரைக்கால் ஆகிய முக்கிய ஊா்களுக்கு வேளாங்கண்ணியிலிருந்து ஆக.28 முதல் செப்.9 வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், அனைத்து ஊா்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.