சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சார ரயில் சேவை சீராகி வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்.