கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு!
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன.
இதையும் படிக்க | தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்
பின்னர் மீண்டும் 2021ல் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள். முடிவடைந்துள்ளன. தாம்பரம் செல்லும் மேம்பாலத்தின் பகுதியை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.
இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் மற்றொரு பகுதியும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.