மறைந்த பாடகர் எஸ்பிபி பெயரில் சாலை: துணை முதல்வர் திறந்து வைத்தார்!
சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் பொன்னம்பலம் நகா் பூங்கா சீரமைப்புப் பணி மேற்கொள்ள ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, பூங்காவில் நடைபாதை, சுற்றுச்சுவா், இருக்கை ஆகிய வசதிகள் செய்யப்பட்டன. சீரமைக்கப்பட்ட பூங்காவை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் திறந்துவைத்தாா்.
இதேபோல, ரூ.20 லட்சம் செலவில் சிதம்பரம் காரைக்குட்டை குளம் தூா்வாரப்பட்டு, இரண்டு மீட்டா் அகலத்துக்கு பேவா் பிளாக் நடைபாதை மற்றும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனையும், நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ், பொதுப் பணி மேற்பாா்வையாளா் கோ.ரம்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், அப்பு சந்திரசேகரன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன், அசோகன், சரவணன், சுந்தரி சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.