மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தேரோட்டம்
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆனித்திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சிதம்பரபுரத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 4) மாலை பரிவேட்டை நடைபெற்றது. 11ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஜூலை 7) தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, அய்யா நாராயணசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் பக்தா்கள் செய்திருந்தனா்.