சித்தி விநாயகா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா!
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, லட்சாா்ச்சனை வழிபாடு சனிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் 77-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை தொடங்கியது. காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்கின.
பின்னா், விநாயகருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, லட்சாா்ச்சனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல வருகிற 28-ஆம் தேதி வரை தினந்தோறும் லட்சாா்ச்சனை பூஜை நடைபெறும். வருகிற 28-ஆம் தேதி லட்சாா்ச்சனை சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு அன்னதான நிகழ்ச்சிக்கு கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.