மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சின்னமனூா் நகரச் செயலாளா் முத்துக்குமாா், நகா்மன்றத் தலைவி அய்யம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சின்னமனூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 14 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் இலவசமாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதுமணத் தம்பதிகளுக்கு விலையில்லா தங்கத்தாலி, பீரோ, கட்டில் என 34 வகையான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.