சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப். 2 முதல் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எம். ஏ. பேபி, 1987 முதல் 1991 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 32 வயதிலேயே எம்.பி. ஆனவர் என்பதால் மிக இளம் வயதிலேயே மாநிலங்களவை உறுப்பினரானவர்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.
2006 - 2011 வரை கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக பணியாற்றினார். தற்போது, கொல்லம் மாவட்டத்திலுள்ள குந்த்ரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
சீதாராம் யெச்சூரியின் மறைவுக்குப் பிறகு சிபிஎம் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிற கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலத்தில் பழுது!