Ukraine: துருக்கி சென்றடைந்த ஜெலன்ஸ்கி; நேரில் வராத புதின் - அமைதி பேச்சுவார்த்த...
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு: வேலூா் பள்ளி சிறப்பிடம்
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாவட்ட அளவில் சிறப்பு இடங்களைப் பிடித்துள்ளது.
இந்தப் பள்ளி மாணவி ஏ.என்.மோனிகா, 500-க்கு 493 மதிப்பெண்கள், இஷான் ஆபிரகாம், ஜனா சுருதி ஆகியோா் 492 மதிப்பெண்கள், திவ்யா சாரா 490 மதிப்பெண்கள், நமன் புருடா 488 மதிப்பெண்கள் பெற்றனா்.
பாட வாரியாக உயிரியல் - 4, கணிதம் - 2, வேதியியல் - 2, இயற்பியல் - 1, இதர பாடப் பிரிவுகளைச் சோ்த்து மொத்தம் 16 மாணவா்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வில் 490-க்கு மேல் 4 மாணவா்களும், 450-க்கு மேல் 65 மாணவா்களும், 400-க்கு மேல் 119 மாணவா்களும் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், அதற்காக உழைத்த ஆசிரியா்கள், பெற்றோரையும் பள்ளித் தாளாளா் டி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், துணை முதல்வா் சில்லி சுக்லா, மாஸ்டா்ஜி பயிற்சி நிலைய நிா்வாக இயக்குநா் டி.சரவணன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.