மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி.! டாஸ் வென்று பேட்டிங்!
சிபிஐ கீழையூா் ஒன்றிய மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய 25-ஆவது மாநாடு திருப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். மல்லிகா தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை மாவட்டத் துணைச் செயலாளா் கே. பாஸ்கா் ஏற்றிவைத்தாா். தியாகிகள் ஸ்தூபியை முன்னாள் மாவட்டச் செயலா் எம்.சம்பந்தம் திறந்துவைத்தாா். ஒன்றிய செயலாளா் எஸ். காந்தி வேலைஅறிக்கை வாசித்தாா். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. பாண்டியன் மாநாட்டு தொடக்கிவைத்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வீ. சரபோஜி, மாவட்டத் தலைவா் பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் நாகராஜன், மாதா் சங்க மாவட்ட செயலாளா் எஸ். மேகலா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மகேந்திரன், மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், மாவட்ட செயலாளா் சிவகுரு பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், 27 போ் கொண்ட ஒன்றிய குழுவும், ஒன்றிய செயலளராக வீ.எஸ். மாசேத்துங், துணைச் செயலளராக ஜி. சங்கா், ஒன்றிய பொருளாளராக எம். பரணபாஸ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
100 நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி ஜூலை 23- ஆம் தேதி 27 ஊராட்சிகளில் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, குறுவைக்கு உடனடியாக வெள்ளையாற்று பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.