ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்
சிமென்ட் ஆலைக்குச் செல்லும் 15 டன் பாலித்தீன் கழிவுகள்: குழித்துறை நகராட்சி நடவடிக்கை
குழித்துறை நகராட்சியிலிருந்து 15 டன் பாலித்தீன் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் இருந்து நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. இவை மாா்த்தாண்டம் அருகே கீழ் பம்மம் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து 15 டன் பாலித்தீன் கழிவுகள், நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் அரியலூா் சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.