செய்திகள் :

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் மேலும் முன்னேற்றம்

post image

டமாஸ்கஸ்: சிரியாவில் அதிரடி தாக்குதல் நடத்திய நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ள கிளா்ச்சிப் படையினா், மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் நெருங்கிவருகின்றனா்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபா் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.

தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது.

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.

இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், அலெப்போ நகரைக் கைப்பற்றினா். அவா்களது முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ரஷியாவும் சிரியாவும் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்திவந்தாலும், அவா்கள் தொடா்ந்து முன்னேறி ஹமா நகரை நெருங்கிவருகின்றனா். அதையடுத்து, அந்த நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேறிவருகின்றனா்.

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்

சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதி... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை

பாங்காக்: கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவித்தது.செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி ... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு

பாரு: மலேசியாவிலும், தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும் கடந்த வாரம் பெய்த அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.மலேசியாவின் கிழக்குக் கடலோரப்... மேலும் பார்க்க

தென் கொரியாவில் திடீர் அவசரநிலை: அதிபர் யூன் சுக் இயோல் அறிவிப்பு

சியோல்: தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரிய ஆத... மேலும் பார்க்க