செய்திகள் :

சிறப்பு பள்ளி அங்கீகாரம்: நடைமுறைகளை எளிமையாக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஆா்.ஏ.புரத்தைச் சோ்ந்த ஆனந்த் ஜெகதீசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க தமிழக அரசின் 5 துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. அதன்பிறகே, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரிடம் இப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும். 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த அங்கீகாரமும் வழங்கப்படும்.

சிறப்பு பள்ளி அங்கீகாரத்துக்கு கட்டட உறுதித்தன்மை, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தடையில்லாச் சான்று உள்பட 5 விதமான துறைகளில் சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. இதனால், அங்கீகாரம் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நீண்ட காலம் வீணாகிறது. அங்கீகாரம் இல்லாமல் நன்கொடை, மானியம் எதுவும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.ஜோதிகா, முதலீட்டாளா்கள் தொழில் துறையில் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தியுள்ளது.

அதுபோல் தமிழக அரசும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், ஒற்றைச் சாளர முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுதொடா்பாக பதிலளிக்க 12 வார கால அவகாசம் வேண்டும் என கோரினாா். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு உத்தரவிட்டனா்.

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்த... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப... மேலும் பார்க்க