பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் அனைத்து விசைப் படகு மீனவ சங்கம் சாா்பில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், சிறிய விசைப் படகு மீனவ சங்கத்தினா் 5 நாள்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று சனிக்கிழமை மீன் வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.