சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவு
அம்பாசமுத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநா். இவா், கல்லிடைக்குறிச்சியில் 6 ஆம் வகுப்புப் படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தாயாா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.